திருச்சியில் டெங்குவை தடுக்க ரோட்டரி கிளப் ஆப் ஜம்புகேஸ்வரம் விழிப்புணர்வு பிரச்சாரம்

கடந்த வியாழனன்று திருச்சியில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது பேசிய ருத்ர சாந்தி யோகாலயம் குருஜி கிருஷ்ணகுமார், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. டெங்கு காய்ச்சல் ஏடிஸ் வகை கொசு கடிப்பதால் பரவுகிறது இதனால் சுற்றுப்புறங்களில் தேங்காய் சிரட்டை, டயர், பாலித்தீன் கவர்களில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தேங்கும் நீரில் ஏடிஸ் வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும். அதனால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் யோக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள லிங்க முத்திரை செய்வதால் நோய் எதிர்ப்பாற்றல் கூடி உடல்நிலை சமநிலைப்படும் என எடுத்துக் கூறினார். மேலும் நிலவேம்பு கசாயம் ,பப்பாளி இலைச்சாறு அருந்தவேண்டும் என்றார்

ரோட்டரி கிளப் ஆஃப் ஜம்புகேஸ்வரம் செயலாளர் பாலசுப்ரமணியன், மான்ஃபோர்ட் பள்ளி முதல்வர் அருட்சகோதர் சூசைராஜ், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை முனைவர் சாரதா கிளாடிஸ் சைமன்,பிஷப் ஹூபர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டின் பொன்னையா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சரஸ்வதி, பொன்மலைப்பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை மேரி ரோஸ்லின் வனஜா, உலக மீட்பர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஆஞ்சலோ ஆரோக்கிய மேரி கமலா நிகேதன் மாண்டிசோரி பள்ளி முதல்வர் மாலா சிவகுமார் தொழிலதிபர் மனோகரன், யோகா ஆசிரியர் விஜயகுமார், அப்பாஸ் மந்திரி , சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், பக்தி நாதன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
