கர்ப்பிணியை எரித்துக்கொன்ற கணவன் திருச்சி மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

0

 கர்ப்பிணியை எரித்துக்கொன்ற கணவன்
திருச்சி மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

கஜேந்திரன்
கஜேந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுக்க டி .மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கஜேந்திரன்(34), கறிக்கடை வியாபாரி. அவரது மனைவி நாகலட்சுமி(32) கடந்த அக்-10 தேதி காலை தீடீரென வீட்டினுள் இருந்து உடல் முழுவதும் நெருப்புடன் கத்திக்கொண்டு வெளியே ஓடி வந்துள்ளார். இதனை பார்த்த அக்கப்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நாகலெட்சுமி அக்-14 இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் நாகலட்சுமி உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு நாகலெட்சுமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவருடைய கணவர் கஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் கூச்சலிட்டு திருச்சி மருத்துவமனை வளாகம் முன் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது கூட்டத்தை தடுக்க முயன்ற போலீசாருக்கும் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

‌சந்தா 1

சந்தா 2

இதுதொடர்பாக உறவினர்களிடம் பேசியபோது நாகலட்சுமி எம்.ஏ.,பி.எட்.,எம்.பில் பட்டப்படிப்பு படித்துள்ளதாகவும், இவருக்கும் கஜேந்திரனுக்கும் திருமணம் நடைபெற்று 3 வருடம் ஆன நிலையில், இவர்களுக்கு 1 குழந்தை இருப்பதாக தெரிவித்தனர். சமீபகாலமாக கஜேந்திரன் வரதட்சணை கேட்டு நாகலெட்சுமியை துன்புறுத்தி பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனிடையே நாகலெட்சுமி அடிக்கடி வீட்டிலிருந்தும், பணம் பெற்று சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கஜேந்திரன் தீபாவளி வருவதாக சொல்லி நாகலெட்சுமியை வீட்டிலிருந்து பணம் வாங்கி தருவதாக தொல்லை செய்துள்ளார்.

இதனால் கோபமடைந்த நாகலெட்சுமி வாய்வார்த்தையாக சண்டையிட்டுள்ளார். சம்பவத்தன்று நாகலெட்சுமியுடன், அவரது கணவர் கஜேந்திரனும் உடன் இருந்ததாகவும், அவர் தான் நாகலெட்சுமியை தீயிட்டு கொலை செய்திருப்பார் என்று உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் நாகலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், அக் -13 நேற்று குழந்தை இறந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினர். அப்போது அறுவை சிகிச்சை மூலம் சிசுவை எடுக்க கணவர் மற்றும் பெற்றோரிடம் மருத்துவர்கள் கையெழுத்து வாங்கியபோது கஜேந்திரன் கையொப்பமிடாமல் ஓடிவிட்டதாகவும் கையொப்பமிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக இலுப்பூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிந்து, நாகலட்சுமி கணவர் கஜேந்திரன் மற்றும் உறவினர்களை விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.