இந்தியன் திரைப்படத்தின் உண்மையான கதாநாயகன்- திருச்சி நல்லசிவம்

0
1

திருச்சியில் இந்தியன் திரைப்படத்தின் உண்மையான கதாநாயகன்.. இவர் தான்

திருச்சியில் புரட்சிகரத் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். இந்தியன் திரைப்படத்தின் உண்மையான கதாநாயகன் அவர்தான். அவரது இளமைக்காலத்தில் ரயில்வேத் துறையில் பணி புரிந்த போது அந்த வேலையை விட்டுவிட்டு புரட்சிகரப் பாதைக்கு திரும்பியவர். காவல்துறையை மட்டுமல்லாது மற்ற துறைகளையும் தனது புரட்சிகர பாதையால் ஆட்டுவித்தவர். தனது முகமோ இருப்பிடமோ பிறருக்குத் தெரியாமல் வாழ்ந்தவர். அண்மைக் காலமாக உடல் நலம் குன்றி இருந்தார்.

2

தோழர் நல்லசிவம் (முகமது கனி) (11.10.2019) அன்று மாலை எட்டு மணி அளவில் இயற்கை எய்தினார். 1950 களின் தொடக்கத்திலிருந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பணி ஆற்றியவர். 1960களின் பிற்பகுதியில் இ.பொ.க. (மா-லெ) வில் தன்னை இணைத்துக் கொண்டு அப்போதைய மாநிலக் குழுவில் உறுப்பினராகவும் சிறிது காலம் மாநிலக் குழுவின் செயலராகவும் செயல்பட்டவர். அமைப்பு பிளவுபட்ட பிறகு மாநில அமைப்புக் குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டவர்.

அதன் பிறகு உருவான தமிழ் நாடு அமைப்புக் குழு வில் உறுப்பினராகச் செயல்பட்டவர். இறுதி வரை யிலும் சோசலிச இலட்சியத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டவர். தனது இறுதிக் காலத்திலும் சோசலிசத் தொழிலாளர் இயக்கத்துடன் இணைந்து செயலாற்றியவர்.
இந்திய பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக தன் இறுதி மூச்சுவரை அயராது உழைத்தவர். அவரின் வழியில் நின்று சோசலிச சமூகத்தை படைத்திட உறுதியேற்போம்.

3

Leave A Reply

Your email address will not be published.