ஸ்ரீரங்கம் வட்டாச்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

திருச்சி மாநகா் மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீரங்கம் வட்டாச்சியா் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி மனு கொடுக்கும் போராட்டம் ஒன்றிய செயலாளா் வி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனா்.
மாவட்ட நிர்வாகிகள் செல்வராஜ், தங்கத்துரை, இளங்கோவன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.
