ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் டோலோத்ஸவம்

0
D1

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் வரும் 16 ஆம் தேதி ஊஞ்சல் திருவிழா (டோலோத்ஸவம்) தொடங்க இருக்கிறது. 9 நாள்கள் நடைபெறும் இந்த விழா வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறும்.

N2

விழா நாட்களில் தினசரி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் உற்ஸவம் கண்டருள்கிறார். இதை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்வர். இந்த விழாவின் 7 ஆம் நாளான 22 ஆம் தேதி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி, நிறைவு நாளான 24 ஆம் தேதி தீா்த்தவாரி கண்டருளுதல் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்

N3

Leave A Reply

Your email address will not be published.