மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் அந்தந்த கோட்டாட்சியர் அலுவலகங்களில் 14.10.2019 (திங்கட்கிழமை) அன்று 4.00 மணிக்கு பிற்பகல் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள,; வங்கிகடன்கள் பெறுவது மற்றும் பல்வேறு கோரிக்கைகள் சம்மந்தமாக அந்தந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் நேரில் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. திருவரங்கம் சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருச்சிராப்பள்ளி, முசிறி மற்றும் இலால்குடி ஆகிய கோட்டாட்சியர் அலுவலகங்களில் 14.10.2019 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 04.00 மணிக்கு அந்தந்த கோட்டாட்சியர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் அனைத்து குறைகளையும் நேரில் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
