திருச்சி மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்காததால் பிரசவ குழந்தை இறப்பு

0
Full Page

திருச்சியில் மருத்துவர்களின் கவனக்குறைவினால் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை.

திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. திருச்சி பாலக்கரை பருப்புக்காரத் தெரு பகுதியை சேர்ந்தவர் சதாம்உசேன். இவர் ரஹ்மானிய புரத்தை சேர்ந்த பாத்திமா பேகம் என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம்
செய்துகொண்டார். கடந்த 7ஆம் தேதி அவரது மனைவி பாத்திமா பேகத்தை பிரசவ வலி காரணமாக திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தார்.

Half page

அன்று மாலை 5மணிக்கு பனிக்குடம் உடைந்து இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் சுக பிரசவத்தில் குழந்தை பிறக்க செய்ய மிகவும் சிரமபட்டனர். ஒரு கட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள உபகரணங்களை கொண்டு பிரசவம் பார்ப்பது கடினம் என முடிவெடுத்த அவர்கள் உடனே திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து இரவு 9மணிக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.அங்கு உடனடியாக பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது பிறந்த ஆண் குழந்தையானது ஏற்கனவே பிரசவத்தின் போது சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனையில் குழந்தையை ஆரம்பத்தில் சரியாக கையாளததால் இறந்து விட்டது எனவும், மேலும் பாத்திமாேபகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த உறவினர்கள் திருச்சி பீமநகர் உள்ள ஆரம்ப சுகாதார முற்றுகையிட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர் உறவினர்களை தரக்குறைவாக பேசியதால் உறவினர்கள் அவரை சரமரியாக தாக்கியுள்ளனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் இச்சம்பம் குறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் சதாம்உசேன் அளித்த புகாரில் தனது மனைவியை அவசர சிகிச்சைக்காக பீமநகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுச்சென்றேன் ஆனால் அங்கு பணியில் எந்த மருத்துவர்களும் இல்லை. மேலும் அங்கு இருந்த செவிலியர்கள் சிகிச்சை அளிப்பது எப்படி என்று தெரியாமல் குழந்தையை காயப்படுத்தி இறுதியில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் எனது குழந்தை பிரசவத்தின் போது இறந்தது, மேலும் பணியில் இல்லாத மருத்துவர் மீதும் செவிலியர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு புகார் அளித்தார்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.