திருச்சியில் சாதனை ஆசிரியர்கள் நூல் வெளியீட்டு விழா.

திருச்சி ரோட்டரி கிளப் ஆஃப் ஜம்புகேஸ்வரம் மற்றும் ஸ்ரீ தனலட்சுமி பப்ளிகேஷன் சார்பில் சாதனை ஆசிரியர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.
இவ்விழாவில் ரோட்டரி கிளப் ஆஃப் ஜம்புகேஸ்வரம் செயலாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். ருத்ரசாந்தி யோகாலயம் குருஜி கிருஷ்ணகுமார் தலைமை வகித்து நூலினை வெளியிட மான்ஃபோர்ட் பள்ளி முதல்வர் சூசைராஜ் நூலினை பெற்றுக்கொண்டார்.
மேலும் மான்ஃபோர்ட் பள்ளி முதல்வர் அருட்சகோதர் சூசைராஜ், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
ஆசிரியை முனைவர் சாரதா கிளாடிஸ் சைமன்,பிஷப் ஹூபர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டின் பொன்னையா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை சரஸ்வதி, பொன்மலைப்பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை மேரி ரோஸ்லின் வனஜா, உலக மீட்பர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஆஞ்சலோ ஆரோக்கிய மேரி கமலா நிகேதன் மாண்டிசோரி பள்ளி முதல்வர் மாலா சிவகுமார் உள்ளிட்ட சாதனை ஆசிரியர்கள் சாதனை நூலில் இடம் பெற்றார்கள்.

மேலும் இவ்விழாவில் தொழிலதிபர் மனோகரன் மற்றும் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிறைவாக அப்பாஸ் மந்திரி நன்றி கூறினார். மேலும் சுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், பக்தி நாதன் உட்பட சங்கத்தினர் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
