திருச்சியில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு ஜெருசேலம் செல்ல அரிய வாய்ப்பு !

0
Full Page

திருச்சியில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு ஜெருசேலம் செல்ல அரிய வாய்ப்பு !

 

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கிருஸ்துவர்கள் ஜெருசேலம் புனித பயணம் மேற்கொள்வதற்கு நபர் ஒருவருக்கு ரூபாய்  20,000  நிதிஉதவி வழங்கப்படுகிறது.  புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் கிருஸ்துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  இதற்கான காலக்கெடு 30.11.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Half page

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் 2019-20 ஆம் ஆண்டின் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000 (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்;துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய  600 கிறிஸ்துவர்கள் இதில் 50 கன்னியாஸ்திரிகள்ஃஅருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசால்  ஆணையிடப்பட்டுள்ளது,

இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்துவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் செப்டம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.   பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.     இதற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். தவிர www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்படிவத்தை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான காலக்கெடு 30.11.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே புனித பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன்   அஞ்சல் உறையில் “கிருஸ்துவர்களின்; ஜெருசலேம் புனிதபயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20”  என்று குறிப்பிட்டு; ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரிக்கு  30.11.2019-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்புதல் வேண்டும். (நேரில் வரவேண்டியதில்லை) மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்ஃ சிறுபான்மையினர் நல இயக்குநரக (தொலைபேசி எண். 044-28520033)-த்திலும் தொடர்பு கொள்ளலாம்.

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.