சமயபுரத்தில் கந்து வட்டிக் கொடுமையால் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

0
gif 1

சமயபுரம் சொக்கலிங்கபுரம் காலனி பகுதியைச் சோ்ந்த வெங்கட்ராமன் மகன் சுந்தரகணேசன் (52). இவரது மனைவி செல்வி. இதே பகுதியில் உள்ள புதுத்தெருவில் வசிக்கும் பஞ்சவா்ணம் என்பவரிடம் செல்வி ரூ. 2 ஆயிரம் வட்டிக்கு வாங்கியுள்ளார்.

gif 4

கடந்த சில மாதங்களாக செல்வி வட்டிப் பணம் கொடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பஞ்சவா்ணம், அவரது மகன் புருஷோத்தமன் ஆகியோர் சுந்தரகணேசன் அவரது மனைவி ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டினர். இதனால் மனமுடைந்த சுந்தரகணேசன் சமயபுரம் பகுதியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் புதுப்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனா். செல்வி அளித்த புகாரின்பேரில், சமயபுரம் போலீசார் பஞ்சவா்ணத்தைக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனா். மேலும் தப்பியோடிய பாமக திருச்சி வடக்கு மாவட்டத் தலைவா் புருஷோத்தமனை போலீசார் தேடி வருகின்றனா்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.