வீட்டிலேயே   குப்பைகளை உரமாக்குவது  சம்பந்தமான  மாபெரும் கண்காட்சி

0
D1

திருச்சி மாநகராட்சியி சார்பில் அக்டோபர் 11,12 மற்றும் 13.10,2019 ம்தேதி  (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) ஆகிய   மூன்று தினங்களில்  திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள  “கலையரங்கம்”  திருமண மண்டபத்தில்  மழைநீர் சேகரிப்பு  முறைகள், வீட்டிலேயே   குப்பைகளை உரமாக்குவது  சம்பந்தமான  மாபெரும் கண்காட்சி (EXPO)  காலை 10.00மணி முதல் இரவு 9.00மணி வரை  நடைபெற உள்ளது.

N2

கண்காட்சியில் வீடுகள் மற்றும் இதர  நிறுவனங்களில் தினசரி உற்பத்தியாகும் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்க , சிறிய அளவிலான உபகரணங்கள் முதல் (Home  Composter)  பெரிய வகை உபகரணங்களான உயிரி எரிவாயு (Bio Gas) தயாரிப்பு கருவிகள்,  சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற வழிகள் , மாடித்தோட்டங்கள் அமைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக  உபயோகிக்க கூடிய துணிப்பைகள் ஆகியவை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இந்த  கண்காட்சியை அனைத்து பொதுமக்கள்,  வீடு/நிறுவன உரிமையாளர்கள் மற்றும்  பள்ளி, கல்லூரி மாணவ/மாணவிகள் ஆகியோர்  கண்காட்சி   நடைபெறும்  நாட்களில் நேரில் வந்து   பார்வையிட்டு அவற்றை பற்றிய  விவரங்களை தெரிந்து கொண்டு தங்களுக்கு   தேவையான உபகரணங்களை  வாங்கி தங்கள்  வீடுகள்,  நிறுவனங்களில்  பயன்படுத்தி  திருச்சி  மாநகராட்சியை நூறு  சதவீதம்  சுற்றுச்சூழல்  பாதிப்பில்லா குப்பையில்லா மாநகராட்சியாக மாற்ற ஒத்துழைப்பு தந்து உதவிட திருச்சி  மாநகராட்சி ஆணையர்  தெரிவித்துள்ளார்.

 

N3

Leave A Reply

Your email address will not be published.