திருச்சி மாவட்ட ஆட்சியரின் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வு

0
1

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை நகராட்சி அலுவலகம், மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் ஆகிய அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் சிவராசு நேற்று ஆய்வு செய்தார்.

மணப்பாறை நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணி ஆகிய பணிகள் தொடர்பாக நகராட்சி ஆணையர் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும்  பணியாளர்களுடன் விரிவாக ஆய்வு செய்த ஆட்சியர் மழை காலம் தொடங்க உள்ளதால் சுகாதார துறையின் மூலம் டெங்கு கொசு ஒழிப்புப்பணி தீவிரபடுத்தமாறும், பொது மக்கள் வீடுகளின் சுற்றுப்புறங்களில் தேங்காய் மட்டை, பழையடயர், பிளாஸ்ட்டிக்கப், பிளாஸ்ட்டிக்பை, தேங்காய்ஓடு, போன்றவற்றில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவது குறித்து, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து தங்கள் வீடுகளின் சுற்றுப்புறங்களில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், வீடுகளில் பாத்திரங்களில் நீர் நிரப்பி வைக்கும் போது மூடி வைக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து கண்ணுடையான் பட்டி ஊராட்சியில் ஆளம்பட்டி, செட்டியப்பட்டி, மரவனூர்,  ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியாளர்களிடம்  டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக  வீடுவீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு  பணியில் முழுமையாக ஈடுபட அறிவுறுத்தினார்.

2

பின்னர் மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் தொடர்பாக ஆய்வு செய்தபின் 13 நபர்களுக்கு புதிய குடும்ப  அட்டைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது மணப்பாறை வட்டாட்சியர் தமிழ்கனி, நகராட்சி ஆணையர், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.