தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் சார்பில் இசை பயிற்சி பள்ளி திருச்சியில் துவக்கம்

0
D1

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து திருச்சியில் மறைமாவட்ட கல்வி சங்கத்தின் சார்பில் இசை பயிற்சி பள்ளி துவக்கம்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து திருச்சிராப்பள்ளி மறை மாவட்ட கல்வி சங்கம் சார்பில் திருச்சியில் கலையரசி  இசை மற்றும் நாட்டிய சான்றிதழ் பயிற்சி பள்ளி இன்று திருச்சி பொன்னநகர் அமலோற்பவம் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து செய்தியாளர்களுக்கு   பேட்டி அளித்த கலையரசி நாட்டியப் பள்ளியின் இயக்குனர் அருட்தந்தை அந்துவான் கூறுகையில்.

 

D2
N2

தமிழக அரசின் பண்பாட்டு துறை அமைச்சகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மூலம், தமிழ் மொழி மற்றும் கலை வடிவங்களை 8படிநிலைகளை கொண்ட பயிற்சி வகுப்புகளை பல மையங்கள் வழியாக தமிழகமெங்கும் நடத்த அனுமதி வழங்கி உள்ளது.

 

திருச்சியில் மாநகரில்  இசை மற்றும் நாட்டியம் கற்றுக் கொள்ளும் வகையில் கலையரசி இசை மற்றும் நாட்டிய பள்ளி துவக்கப்பட்டு இந்த நாட்டியப்பள்ளி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தோடு புரிந்துணர்வு  ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த வகையில் கலை பயிற்சி பெறுவதற்கான தகுதிகள் பாடத்திட்டம், வகுப்புகள்,தேர்வு,சான்றிதழ் என அனைத்து சட்டதிட்டங்களையும் பல்கலைக்கழகம் வகுத்துக் கொடுத்துள்ளது. இதன் மூலம் இங்கு பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் பயிற்சியின் நிறைவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும்.

 

மேலும் வாரத்தில் இரண்டு வகுப்புகள் நடைபெறும் வகையில் செயல்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் மாலை 5 முதல் 6 மணி வரை மற்றும் 6 மணி முதல் 7 மணி வரை என இரு பிரிவுகளாக நடைபெறும். 8 நிலைகளில் பாடத் திட்டம் அமைந்துள்ளது, இதில் ஆறு மாதம் ஒருமுறை தேர்வுகள் நடைபெறும். தற்போது திருச்சி  பள்ளியில் வாய்ப்பாட்டு, வயலின் , வீணை மற்றும் பரதம்  அதற்கான பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளது.

 

மேலும் எட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த பயிற்சியில் சேரலாம். இதை திருச்சி மாநகர மக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது குழந்தைகளின் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.

 

N3

Leave A Reply

Your email address will not be published.