திருச்சி IOB வங்கிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்த திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

0
full

திருச்சி வங்கிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்த திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

 

திருச்சி தில்லைநகர் 8வது கிராசை சேர்ந்தவர் ஒய்.ஜி.ஆண்ட்ரூஸ், ஓய்வு மாவட்ட நீதிபதி. இவர் தொண்டு நிறுவனத்திற்காக ரூ.40 ஆயிரம் நன்கொடையை காசோலையாக வழங்கினார். காசோலையை பெற்ற ெதாண்டு நிறுவனம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தினர். இதில் ஆண்ட்ரூஸ் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லை என கூறி காசோலையை திருப்பி அனுப்பினர்.

 

ukr

இதனால் பதறிய ஆண்ட்ரூஸ், தனது வங்கி கணக்கை சோதித்தபோது ரூ.2 லட்சம் பண இருப்பு இருப்பதாக காட்டியது. இதனால் மனஉளைச்சல் அடைந்த ஆண்ட்ரூஸ், இது குறித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கி மீது வழக்கு தொடர்ந்தார். இது குறித்த விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சண்முகநாதன் நேற்று தீர்ப்பளித்தார்.

 

poster

தீர்ப்பில், சேவை குறைபாடு காரணமாகவும், மனுதாரருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், வழக்கு கட்டண தொகை ரூ.5 ஆயிரம் என ரு.30,000 நஷ்டஈடு விதித்து இந்த தொகையை 2 மாதத்திற்குள் கட்ட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.