கேரள ரயிலில் லூட்டி அடிக்கும் கடத்தல் மன்னன் வணக்கம் சோமு

0
1

கேரள ரயிலில் லூட்டி அடிக்கும் கடத்தல் மன்னன் வணக்கம் சோமு

திருச்சியில் கல்லூரி பேராசிரியர் கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகருக்கு போலீசார் வலை

4

திருச்சி மலைக்கோட்டை நைனார் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி(33). இவர் இந்திராகாந்தி கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், (30/09/2019) அன்று காலை ஆண்டாள் வீதி வழியாக அவர் கல்லூரிக்கு செல்லும்போது ஆம்புலன்ஸ் ஆம்னி வேனில் காத்திருந்த மர்மகும்பல் மகாலட்சுமியை கடத்தி சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வருவதை அறிந்த அக்கும்பல் மகாலட்சுமியை துவரங்குறிச்சி அருகே விட்டுச்சென்றது.

2

இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சண்முகவேல் நடத்திய விசாரணையில் மகாலட்சுமி கூறியதாவது…

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த அதிமுக வட்ட செயலாளர் வணக்கம் k .சோமு கடந்த சில மாதங்களாக நான் செல்லும் இடங்களுக்கு வந்து என்னை காதலிப்பதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளுமாறும் கூறி வற்புறுத்தினார். அதனை நான் ஒருபோதும் சம்மதிக்கவில்லை, மேலும் என்னிடம் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் தகராறு செய்து வந்தார்.அவர் தான் இன்று மர்ம நபர்களை கொண்டு கடத்தி சென்றதாகவும் விஷயம் பெரிதானதால் என்னைவிட்டு சென்று விட்டதாக கூறினார்.

இதையடுத்து போலீசார் வணக்கம் சோமுவை தனிப்படையமைத்து தேடி வந்த நிலையில் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அவரது நபர்கள் இரண்டு பேர் சிக்கினர். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்த அலெக்ஸ் (36), பிரதாப் (35) ஆகியோரை வணக்கம் சோமு, தான் காதலிக்கும் பெண்ணை கடத்த உதவி செய்யமாறு கேட்டார் ஆதலால் நாங்களும் உதவி செய்தோம், ஆனால் போலீஸ் பின்தொடர்ந்து வருவது தெரிந்தவுடன் நாங்கள் பாதியிலேயே இறங்கிவிட்டோம். என்று போலீசார் விசாரணையில் இருவரும் கூறியுள்ளனர். அதனடிப்படையில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான வணக்கம் சோமு இருக்கும் இடத்தை போலீசார் பின் தொடர்கையில் வணக்கம் சோமு சமீபத்தில் ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து சிலருக்கு பேசியதாகவும், மேலும் அந்த எண்ணினை போலீசார் எங்கிருந்து வருகிறது என்று நெட்வெர்க்கை (டிரேஸ்) செய்து, தொடர்புக் கொண்டு பேசியதில் செல்லின் உரிமையாளர் கேரளா செல்லும் ரயிலில் பயணித்து கொண்டிருப்பதாகவும், ஒரு நபர் அர்ஜெண்ட் கொஞ்சம் போன் கொடுங்கணு வாங்குனாரு, அவர் யார் எவரெனு எனக்கு தெரியாதுன்னு அந்நபர் கூறியுள்ளாராம். அதனடிப்படையில் போலீசார் வணக்கம் சோமு கேரளா சென்றுக்கொண்டிருப்பதை உறுதிசெய்தனர்.

மேலும் திருச்சி மாநகர கோட்டை காவல் நிலையத்திற்குட்டபட்ட இரண்டு வழக்குகள் இன்னும் போலீசாருக்கு தண்ணீர் காட்டிக்கொண்டே இருக்கிறது என்று பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்