திருச்சியில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் 25,000 மரக்கன்றுகள் நட்டனர்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை அன்று
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் 65 வார்டு பகுதிகளிலும் தூய்மை பணி மற்றும் 25,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் இரவிச்சந்திரன் துவக்கிவைத்தார்.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை அன்று
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் தூய்மையே சேவை இயக்கம் மாநகராட்சி 65 வார்டு பகுதிகளில் உள்ள குடியிருப்பு நலச்சங்கத்தினர்கள்,பொதுமக்கள், பசுமை ஆர்வாளர்கள்,பள்ளி மாணவ ,மாணவிகள் மூலம் 25 ஆயிரம் இடங்களிலும் மரங்களை நட்டு அந்தந்த வீட்மூன் உரிமையாளரின் பராமரிப்பில் ஓப்படைக்கப்பட்டுள்ளது.
பொன்மலை கோட்டம் 35வது வார்டு அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி அருகில் உள்ள சாலை பகுதிகளில் தூய்மையே சேவை இயக்கம் நிகழ்வின்பிடி பிளாஸ்டிக் இல்லா மாநகரத்தை உருவாக்குதல் மற்றும் மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்து மாநகராட்சி ஆணையர் இரவிச்சந்திரன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டு அப்பகுதி குடியிருப்பு நலச்சங்கம் மற்றும் கல்லூரி மானவர்கள், பொதுமக்கள் இணைந்து 500க்கும் மேற்பட்டோர் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள். பின்னார் அப்பகுதி முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி தூய்மைபடுத்தினார்கள்.


இதேபோல் அரியமங்கலம், ஸ்ரீரங்கம், கோ-அபிசேகபுரம் கோட்டங்களில் உள்ள தெரு பகுதிகளில் உதவி ஆணையர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த அந்த வார்டு பகுதிகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி தூய்மைபடுத்தினார்கள். இதில் 65 வார்டு பகுதிகளிலும் சுமார் 5டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.

மேலும் மாநகராட்சி பகுதியில் செப்டம்பர் 11ம் தேதி முதல் அக்டோபர் 27வரை பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சி என்ற கருப்பொருளின் அடிப்படையில் தூய்மையே சேவை இயக்கம் கடைபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது. அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாண்ம் எனவும் மாநகரை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், இத்திட்டதை பொதுமக்கள் இயக்கமாக மாற்றவேண்ட்ம் என ஆணையர் தெரிவித்தார்.
