திருச்சியில் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல்தலை கண்காட்சி துவக்கம்.

0
D1

திருச்சியில் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல்தலை கண்காட்சி துவக்கம்.

N2

திருச்சிராப்பள்ளி தலைமை தபால் அலுவலகம் அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தில் மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பாபுபெக்ஸ் 2019 என்ற பெயரில் சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி துவங்கியது.

அஞ்சல்தலை சேகரிப்பு மைய அலுவலர் ராஜேஷ் வரவேற்றார். மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குனர் தாமஸ் லூர்துராஜ் கண்காட்சியை துவங்கி வைத்தார். முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணபதி சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். கண்காட்சியில் அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் சுந்தர்ராஜ், கார்த்தி, சதீஷ், சர்மா, லால்குடி விஜயகுமார், தாமோதரன், யோகா ஆசிரியர் விஜயகுமார் , வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா உள்ளிட்டோர் மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பினை காட்சிப்படுத்தி இருந்தார்கள்.அஞ்சல் தலை சேகரிப்பு குறித்து ரகுபதி, ஜம்புநாதன் உள்ளிட்டோர் விளக்கினார்கள். இக்கண்காட்சி அக்டோபர் 10-ஆம் தேதி வரை நடைபெறும்.

N3

Leave A Reply

Your email address will not be published.