திருச்சியில் கல்லூரி பேராசிரியர் கடத்தல் வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் கைது

0
Business trichy

திருச்சியில் கல்லூரி பேராசிரியர் கடத்தல் வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் கைது. அதிமுக பிரமுகருக்கு போலீசார் வலை

திருச்சி மலைக்கோட்டை நைனார் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி(33). இவர் இந்திராகாந்தி கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், (30/09/2019) அன்று காலை ஆண்டாள் வீதி வழியாக அவர் கல்லூரிக்கு செல்லும்போது ஆம்னி வேனில் காத்திருந்த மர்மகும்பல் மகாலட்சுமியை கடத்தி சென்றனர்.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த வேன் வேகமாக சென்று விட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி துவரங்குறிச்சி பகுதியில் பேராசிரியை மகாலட்சுமியை மர்ம கும்பலிடமிருந்து மீட்கப்பட்டார்.

loan point
web designer

இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சண்முகவேல் நடத்திய விசாரணையில் மகாலட்சுமி கூறியதாவது…

nammalvar

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த அதிமுக வட்ட செயலாளர் வணக்கம் k .சோமு கடந்த சில மாதங்களாக நான் செல்லும் இடங்களுக்கு வந்து என்னை காதலிப்பதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளுமாறும் கூறி வற்புறுத்தினார். அதனை நான் ஒருபோதும் சம்மதிக்கவில்லை, மேலும் என்னிடம் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் தகராறு செய்து வந்தார்.அவர் தான் இன்று மர்ம நபர்களை கொண்டு கடத்தி சென்றதாகவும் விஷயம் பெரிதானதால் என்னைவிட்டு சென்று விட்டதாக கூறினார்.

இதையடுத்து போலீசார் வணக்கம் சோமுவை தனிப்படையமைத்து தேடி வந்த நிலையில் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அவரது நபர்கள் இரண்டு பேர் சிக்கினர். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்த அலெக்ஸ் (36), பிரதாப் (35) ஆகியோரை வணக்கம் சோமு, தான் காதலிக்கும் பெண்ணை கடத்த உதவி செய்யமாறு கேட்டார் ஆதலால் நாங்களும் உதவி செய்தோம், ஆனால் போலீஸ் பின்தொடர்ந்து வருவது தெரிந்தவுடன் நாங்கள் பாதியிலேயே இறங்கிவிட்டோம். என்று போலீசார் விசாரணையில் இருவரும் கூறியுள்ளனர். அதனடிப்படையில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான வணக்கம் சோமு இருக்கும் இடத்தை போலிஸாரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று போலீசார் வட்டாரம் கூறுகின்றனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.