கல்லூரி மாணவர்களால் துவங்கப்பட்ட பனை விதை நடும் நிகழ்வு

0
gif 1

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி தூய வளனார் கல்லூரி விரிவாக்கத் (செப்பர்டு) துறை மற்றும் இளங்கனல் தொண்டு நிறுவனமும் இணைந்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கத்தலூர் பஞ்சாயத்து அக்கல் நாயக்கன்பட்டி கிராமத்தில் பனைமர விதைகள் நடும் விழாவானது நடைபெற்றது. இவ்விழாவை அக்கல் நாயக்கன்பட்டி பஞ்சாயத்து செயலர் K.நித்தியானந்தம், தலைமை தாங்கினார். தூய வளனார் கல்லூரி விரிவாக்கத் (செப்பர்டு) துறை இயக்குனர் அருட்தந்தை M.பெர்க்மான்ஸ், வாழ்த்துரை வழங்கினார் அவர் தனது உரையில் காந்தியடிகளின் பிறப்பு மற்றும் அவரின் பெருமைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் தலைவர் A.அந்தோணி ஜெய்கர், மற்றும் தூய வளனார் கல்லூரி விரிவாக்கத் (செப்பர்டு) துறை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறிஸ்து ராஜா, மற்றும் தூய வளனார் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறை படத்தொகுப்பாளர் K.ரஞ்சித் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

gif 4

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக தூய வளனார் கல்லூரி வணிகவியல் கணினி துறையின் உதவிப்பேராசிரியர் J.அற்புத சகாயராஜ், கலந்து கொண்டு மாணவர்களுக்கு பனைமரத்தின் சிறப்புகளையும் பயன்களையும் அதன் அவசியத்தையும் பற்றி எடுத்துரைத்தார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளர் முனைவர். ஆனந்த், மற்றும் தூய வளனார் கல்லூரியின் முன்னாள் மாணவர் முனைவர். இக்னேஷியஸ், கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் இறுதியில் கிராமத்து சிறுவர்களுக்கு நடைபெற்ற சிறப்பு போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதன்பின் அந்த மரக்கன்றுகளை அந்த கிராமத்தில் உள்ள குளக்கரையில் நடவு செய்யப்பட்டது. மேலும் பனை விதைகள் ஒவ்வொரு கல்லூரி மாணவர்களும் கொடுக்கப்பட்டு அந்தக் குளக்கரையில் நடவு செய்யும் நிகழ்வானது நடைபெற்றது.

gif 3

இந்நிகழ்வினை தூய வளனார் கல்லூரியின் வணிகவியல் துறை (பணிமுனை2)மூன்றாம் ஆண்டு மாணவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.

பனை விதைகளை நன்கொடையாக வழங்கிய தண்ணீர் அமைப்பிற்கும் அதன் செயலர் நீலமேகம் மற்றும் இணைச் செயலர் ஆநிறைசெல்வன் என்கிற சதீஷ்குமார் மற்றும் தண்ணீர் அமைப்பின் ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் நன்றிகளை இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் சார்பாக  அந்தோணி ஜெய்கர் தெரிவித்துக் கொண்டார்

gif 2

Leave A Reply

Your email address will not be published.