மிளகாய் பொடி தூவி 4 செல் போன் பயன்படுத்தி 50 கோடி நகை கொள்ளை !

0
gif 1

திருச்சி லலிதா ஜூவல்லரியில் பல கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை போலீசார் விசாரணை.

 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரி செயல்பட்டு வருகிறது. 01.10.2019  வழக்கம்போல் வேலை நேரம் முடிந்து ஊழியர்கள் கூட்டிச் சென்று விட்டனர் . பின்னர் 02.10.2019  காலை கடையை திறந்து உள்ளே சென்ற போது கடையின் கீழ்தளத்தில் வைக்கப்படும் இந்த நகைகள் அனைத்தும் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் .

gif 3

இதுகுறித்து மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உதவி துணை ஆணையர் மயில்வாகனன் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

gif 4

கடையின் மேற்புறத்தில் துளையிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் வைர நகைகளை எடுத்து சென்றது தெரிய வந்துள்ளது.  இதன் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடையின் முன்புறம் 6 இரவு பணியாளர் காவல் பணியில் இருந்தனர் . ஆனால், அவர்களுக்கு கொள்ளை சம்பவம் குறித்து எவ்வித தகவலும் தெரியவில்லை மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் கொள்ளையர்கள் கொள்ளையடித்த கடையிலும், அதை சுற்றி பகுதி முழுவதும் மிளகாய்பொடி தூவியதால் மோப்பநாயினால் எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் 2 பேர் கொள்ளையடித்தது சிசிடிவி பதிவில் தெரியவந்துள்ளது. 2 மர்மநபர்களும் தலையில் குல்லா, முகமூடி, கை உறை மற்றும் ஜெர்கின் அணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முகமூடி அணிந்து கொள்ளையடித்த நபர்களை அடையாளம் காண்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 3 தனிப்படைகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் என்றும் 4 தனிப்படைகள் நகை கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு செல்போன் டவர்  கொள்ளையடிக்கும் அந்த நேரத்தில் பயன்படுத்தபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் தடயவியல் துறை இணை இயக்குனர் தலைமையில் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமயபுரம் டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் இதேபோன்று கொள்ளை சம்பவம் நடந்தேறியது எனவே அதே கொள்ளையர்கள் கல்லறையிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.