திருச்சி மகாத்மா காந்தி 150 வது பிறந்த நாளை முன்னிட்டு உலக சாதனை நிகழ்ச்சி

மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழா உலக சாதனை நிகழ்ச்சி:
திருச்சி, சிந்தாமணி, பதுவைநகர், டாக்டர். பீ. ஆர். அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு 150 விநாடிகள் தொடர்ந்து “வந்தே மாதரம்” என்று முழக்கமிடும் நிகழ்ச்சி திருச்சி, ஹைமன் நினைவு மேல்நிலைப்பள்ளியில் 01.10.2019 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

டாக்டர். பீ. ஆர். அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பக்கிரிசாமி வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பெர்ல் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் வழக்கறிஞர். டாக்டர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பெர்ல் அறக்கட்டளையின் துணை நிர்வாக இயக்குநர் கவிஞர் கவி செல்வா முன்னிலை வகித்தனர்.

பங்குதந்தை ஹைமன் நினைவு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோஷ்வா ஜெபகுமார், பொன்மலைப்பட்டி TELC தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை சுகந்தி டெய்சிராணி, டாக்டர். லட்சுமி, ஹரி வெல்பர் டிரஸ்ட் இயக்குநர் கனகவள்ளி, ஜான்சிராணி மகளிர் மன்ற தலைவர் ஹேமலதா, உயிர் காக்கும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் டாக்டர். அப்துல் கபூர், சசிகுமார் நலப்பணிகள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தினேஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்கள். அதனை தொடர்ந்து 150 விநாடிகள் தொடர்ந்து “வந்தே மாதரம்” என்று முழக்கமிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த சாதனை நிகழ்வை உலக சாதனையாக அங்கீகரித்து ஜெட்லி புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டாக்டர். டிராகன் ஜெட்லி டாக்டர். பீ. ஆர். அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றத்திற்கு உலக சாதனைக்கான பதக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தேசபற்றாளர்கள், நேரு யுவ கேந்திராவின் இளைஞர், மகளிர் மன்றங்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சமூகபணி மாணவி வினிதா நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார். இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஜெட்லி புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் ஆம்ஸ்ட்ராங் ராபி மற்றும் தீப லெக்ஷ்மி சிறப்பாக செய்திருந்தார்கள்.
