திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு !

0
Business trichy

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு !

web designer

திருச்சி கலெக்டர் அலுவலகத்தல் 01.10.2019 மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்து மனுக்களை வாங்கினார். இதில் மனு அளிக்க ஏராளமான மக்கள் வந்திருந்தனர். குறைதீர் கூட்டம் நடைபெறும் அரங்குக்கு அருகில் மனு எழுதுவோர் அமர்ந்திருக்க ஷெட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஷெட்டின் அருகே ஒரு குட்டி பாம்பு ஊர்ந்து சென்றது. இதை மனுகொடுக்க வந்தவர்கள் பார்த்ததும் சத்தம் போட்டனர்.
தற்போது நன்றாக மழை பெய்துள்ளதால் கலெக்டர் ஆபீஸ் பின்புறம் உள்ள சுவர்களையொட்டி செடி கொடிகள் மண்டிகிடக்கிறது. அதில் இருந்து தான் இந்த பாம்பு வந்துள்ளது. இது கட்டுவிரியன் பாம்பு என்றும் கொடிய விஷத்தன்மை கொண்டது என்றும் தெரிய வந்தது. உடனடியாக அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸ்காரர் ஒருவர் உடனடியாக அந்த பாம்பை பிடித்தார். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை மூலம் இந்த பாம்பை காட்டில் கொண்டு விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. குட்டி பாம்பு என்பதால் தாய் பாம்பும், பிற குட்டிகளும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பதுங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. இதனால் கலெக்டர் அலுலக பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.