திருச்சியில் தூங்கியவரின் செல்போனை திருடிய வாலிபர் கைது.

0
D1

திருச்சி ஏர்போர்ட்டில் கடை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபரின் செல்போனை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

N2

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தா. பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன்(19). இவர் திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். கடையின் மாடியில் தங்கி உள்ளார். நேற்று முந்தினம் காலை தூங்கி கொண்டிருக்கும் போது, அறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் மணிகண்டனின் செல்போனை திருடிச் சென்றார்.

இதனை கவனித்த மணிகண்டன், திருடனை விரட்டிபிடித்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்த மகேஷ்வரன்(31) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.