திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு.

0
gif 1

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்கும் வகையில், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில்  சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை மற்றும் பருவநிலை மாற்றம்  காரணமாக ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கு பல்வேறு நிலைகளில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தனிப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படும்.

அதன்படி, மாநிலத்தில் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

gif 3
gif 4

திருச்சியிலும் : திருச்சியிலுள்ள மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில்  டெங்கு காய்ச்சலுக்காக பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

காய்ச்சலுடன் வரும் நோயாளிகளைப் பரிசோதிக்கவும், சிகிச்சையளிக்கவும் 2 தனிப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள், ஆண்களுக்கென தலா 6 படுக்கை வசதிகள் உள்ளன.

காய்ச்சலுடன் சிகிச்சைக்காக 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் குறித்து எந்தவித அச்சமும் தேவையில்லை.   டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் வந்தால் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சையளிக்கத்  தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் உறையூரைச் சேர்ந்த ஒருவர் அனுமதிக்கபட்டுள்ல நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார் மருத்துவமனையின் முதன்மையர் (பொறுப்பு) ஆசியா பேகம்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.