திருச்சியில் நூதன முறையில் பெண்ணிடம் நகைபறிப்பு.

திருச்சி அருகே நூதனமுறையில் பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சோமரசம்பேட்டை அருகிலுள்ள அதவத்தரைச் சேர்ந்த கண்ணன் மனைவி கிரிஜா (50). அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வரும் இவர், ஞாயிற்றுக்கிழமை கடையில் இருந்தார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளனர். இதற்கான பணத்தை பெற்று, மீதித் தொகையை எடுக்க கிரிஜா முயற்சித்த போது, மர்ம நபர்களில் ஒருவர் அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் சங்கிலியைப் பறித்தார். தொடர்ந்து இருவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
