தமிழ் இதழியல் ஆய்வாளர் திருச்சி தி.மா.சரவணன் மறைந்தார் !

0
Business trichy

தமிழ் இதழியல் ஆய்வாளர் திருச்சி தி.மா.சரவணன் மறைந்தார் !

 

தமிழ் இதழியல் ஆய்வாளரும், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் தொடர் கட்டுரை எழுதியவருமான  திருச்சிராப்பள்ளி தி.மா.சரவணன் அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக சிறுநீரக செயழப்பு  ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்டு வந்தார்.அவருக்கு மருத்துவமனையில்  தொடர் சிகிச்சை  மேற்கொள்ளப்படது.

loan point

nammalvar

இந்நிலையில் இன்று (1.10.2019) மூச்சு திணறல்  ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி 6.30 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது  56.

 

அவரின் மறைவு தமிழ் இதழியல் துறைக்கு பேரிழப்பாகும். அவர் தமிழ் இதழியல் துறையில் தீவிர ஈடுபாடு கொண்டவர். அரிய வகை நூல்களை சேகரிப்பதில் ஆர்வமிக்கவர்.

ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், சிற்றிதழ்களை சேகரித்து , கலைநிலா இதழகம் நடத்தி வந்தார். அவர் சேகரித்த நூல்களில் ஜனவிநோதினி (1883),  பாரதியாரின் சக்கரவர்த்தினி (1905), சுதந்திரச் சங்கு (1931) உள்பட பல்வேறு திராவிட இயக்க இதழ்கள் முதன்மையானவையாகும் . தீவிர வாசிப்பாளராக மட்டுமன்றி, எழுத்துத்துறையிலும் சிறந்து விளங்கியவர் .  வரலாறு காட்டும் தமிழ்ச் சீரிதழ்கள் (2003), தமிழ் சீரிதழ்கள் நோக்கும் போக்கும் (2006), குறள் நெறியில் தமிழ் இதழ்கள் ( 2007)ஆகியவை அவர் எழுதிய நூல்களாகும். .பொ.சி. குறித்து எழுத வேண்டும் என்பதே அவரின் இறுதி விருப்பமாக இருந்தது.

தமிழ் இதழியல் ஆய்வாளர்.தி.மா.சரவணன்
web designer

தமிழ்த் தேசிய சிந்தனையிலும் இறுதிக் காலத்தில் தடம் பதித்தவர். தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில்  அவ்விதழ் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கடந்து வந்த பாதை குறித்துஇதழியல் நோக்கில் ஒர் ஆய்வுஎன்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதியும் வந்தார்.

 

இன்று பரவலாக பேசப்படும் தமிழ்த் தேசியம் குறித்த கருத்தாக்காங்கள்  தமிழர் கண்ணோட்டம் இதழில் பரிணமித்து வந்திருப்பதை அவர் எழுதிய தொடர் கட்டுரையை படித்து வந்தோர்களால் உணர முடியும். அவர் எழுதிய கட்டுரை இன்றைய இளைய தலைமுறையினர் படித்து தெளிய வேண்டிய தமிழ்த் தேசியப் பாடமாகும்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வந்த தொடர் கட்டுரையை நிறைவு செய்திடும் வேளையில்  மரணம் அவரை தழுவி விட்டது.

 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் சார்பிலும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பிலும்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்!                                                

 

பதிவு: கதிர்நிலவன்தமிழ்

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.