திருச்சி தூய வளனார் கல்லூரியின் விரிவாக்கத்துறை மூலம் குடிநீர் தொட்டி திறப்பு

திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை – செப்பர்டு வழியாக, புதுக்கோட்டை மாவட்டம். விராலிமலை ஒன்றியம், மேலப்பச்சக்குடி கிராமத்தில் “ குடிநீர் தொட்டி திறப்பு மற்றும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம்” 18.09.2019 புதன்கிழமை தொடங்கப்பட்டது. விரிவாக்கத்துறையின் இயக்குநர், அருட்பணி. பெர்க்மான்ஸ் சே.ச வாழ்த்துரை வழங்கி, பள்ளி மாணவர்களுக்கான புதிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.


தமிழ் துறை பேராசிரியர் நல்ல முத்து சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டு,மரத்தினால் ஏற்படும் பயன்கள் பற்றி குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில் கதைகள் வழியாக சிறப்புரையாற்றி, முதல் மரக்கன்றை நட்டு வைத்து மரம் வளர்க்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
பேராசிரியர் மரிய தனபால் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, சுற்றுசுழல் பற்றிய விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்தார். மேலபச்சக்குடி, தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் சுதா அவர்கள் முன்னிலை வகித்தார்கள.; வீட்டிற்கு ஒன்று வீதம் சுமார் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சுற்றுபுற சூழல் மற்றும் நீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாமாண்டு தமிழ்த்துறை மாணவர், செல்வன் சங்கரலிங்கம் அவர்கள், வந்தவர்களை வரவேற்றார். முடிவில் மாணவர், செல்வன். நவின் நன்றி கூறினார். மூன்றாமாண்டு தமிழ்த்துறை மாணவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.; மேலபச்சகுடி பள்ளி குழந்தைகள் மற்றும் ஊர் மக்கள் சுமார் 350க்கும் மேற்பட்டோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
