திருச்சி கல்லூரி பேராசிரியர் கடத்தல் விவகாரத்தில் அதிமுக பிரமுகருக்கு போலீசார் வலை

0
1

திருச்சி கல்லூரி பேராசிரியர் கடத்தல் விவகாரத்தில் அதிமுக பிரமுகருக்கு போலீசார் வலை…

திருச்சி மலைக்கோட்டை நைனார் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி(33). இவர் இந்திராகாந்தி கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று (30/09/2019) காலை ஆண்டாள் வீதி வழியாக அவர் கல்லூரிக்கு செல்லும்போது ஆம்னி வேனில் காத்திருந்த மர்மகும்பல் மகாலட்சுமியை கடத்தி சென்றனர்.

4

2

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த வேன் வேகமாக சென்று விட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி துவரங்குறிச்சி பகுதியில் பேராசிரியை மகாலட்சுமியை மர்ம கும்பலிடமிருந்து மீட்கப்பட்டார்.

இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சண்முகவேல் நடத்திய விசாரணையில் மகாலட்சுமி கூறியதாவது…

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த அதிமுக வட்ட செயலாளர் வணக்கம் k .சோமு கடந்த சில மாதங்களாக நான் செல்லும் இடங்களுக்கு வந்து என்னை காதலிப்பதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளுமாறும் கூறி வற்புறுத்தினார். அதனை நான் ஒருபோதும் சம்மதிக்கவில்லை,
மேலும் என்னிடம் கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் தகராறு செய்து வந்தார்.

அவர் தான் இன்று மர்ம நபர்களை கொண்டு கடத்தி சென்றதாகவும் விஷயம் பெரிதானதால் என்னைவிட்டு சென்று விட்டதாக கூறினார். இதையடுத்து போலீசார் வணக்கம் சோமுக்கு தேடி வருகின்றனர். மேலும் வணக்கம் சோமுவிற்கு திருமணமாகி படிக்கும் மகன் ,மகள் உள்ளனர்.

கல்லூரி பேராசிரியர் கடத்தல் விவகாரத்தில் அதிமுக பிரமுகர் சிக்கியது திருச்சி மாநகருக்குள் பெரும்பரபரப்பு நிலவியுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்