உலக இருதய தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்.

0
1

திருச்சியில் உலக இருதய தினத்தை முன்னிட்டு மக்களிடம் இருதய நலனை வலியுறுத்தும் பொருட்டு இதயத்திற்காக ஓடுவோம் என்ற தலைப்பில் காவேரி மருத்துவமனை CII மற்றும் YI இனைந்து ஐந்தாவது ஆண்டு திருச்சி மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடத்தினர். இதில் 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக இந்த மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

மாரத்தானில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கு பெற்றனர். இந்த மாரத்தான் ஓட்டத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் காவல் துணை ஆணையர் மயில்வாகனன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மேலும், இதில் வெற்றி பெற்றவர்களை திருச்சி மாவட்ட விளையாட்டு தடகள சங்கத்தினர் தேர்வு செய்தனர்.

2

வெற்றி பெற்றவர்களுக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் பரிசுகளும் சான்றிதழ்களும் காவல் துறை ஆணையர் அமல்ராஜ் IPS., வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனருமான மருத்துவர் செங்குட்டுவன் மற்றும் தென்னுர் காவேரி மருத்துவமனையின் கிளை தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.