திருச்சி புனித சிலுவை கல்லூரியில் ஊட்டச்சத்து மாத நிறைவு விழா.

திருச்சி புனித சிலுவை கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத நிறைவு விழா 2019.
திருச்சி புனித சிலுவை கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஊட்டச்சத்தின் அவசியத்தை மையமாகக் கொண்டு பல்வேறு வகையான போட்டிகளை செப்டம்பர் மாதம் நடத்தினர். நிறைவு விழாவானது இறை வணக்கத்துடன் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் அருட்சகோ.முனைவர். கிரிஸ்டினா பிரிட்ஜெட் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி குழுமணி ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவர் ஹெலன் கிரேசில்டனிஸ் கலந்துகொண்டு பெண்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான இயற்கையான உணவு பழக்கங்களையும், முன்பு வயது முதிர்ந்த காலத்தில் வரும் நோய்கள் இப்பொழுது சிறு வயதிலேயே வருவதற்கு நமது தவறான உணவு முறையும் வாழ்கை முறையுமே காரணமென்றார். சிகப்பு அவுல், ராகி, கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணவேண்டும். மண்பானை உணவு ஆரோக்கியமானது. சத்தான உணவை உண்பதன் மூலம் ஆரோக்கியமுடன் அழகாகவும் வாழலாம். பெண்கள் ஆரோக்கியமானவர்களாகவும் வீரமானவர்களாகவும் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.சீரகம் மற்றும் ஓமம் கலந்த நீரை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் என்றார்.

மேலும் இவ்விழாவில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 22 மாணவ , மாணவிகளுக்கு,பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிரியல் மைய ஒருங்கிணைப்பாளர் ரா.சரஸ்வதி மற்றும் மாணவிகள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் 100கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
