திருச்சியில் TNPSC  குரூப்-2 தேர்வுக்கு  இலவசபயிற்சி வகுப்புகள் !   முன் பதிவு அவசியம் !

0
1

திருச்சியில் TNPSC  குரூப்-2 தேர்வுக்கு  இலவசபயிற்சி வகுப்புகள் !   முன் பதிவு அவசியம் !

 

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஜனவரி 2020ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகள் அறிவிக்கப்படவுள்ளது. தேர்வுக்கு கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தேர்வு பற்றிய விபரம் மற்றும் தேர்வு கட்டணம் போன்ற விவரங்கள் வரும் அக்டோபர் 1ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.

2

மேற்கண்ட போட்டி தேர்வுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வருகிற அக்டோபர் 26ம் தேதி  (வியாழன்) முதல் தேர்வு காலம் வரை இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

 

பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறும்.  பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெற விருப்பமுள்ள திருச்சி மாவட்ட இளைஞர்கள் புகைப்படம் மற்றும் சுயவிவரத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், துணை இயக்குனர், திருச்சி என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

 

தனியார் பயிற்சி பள்ளிகளில் இலட்ச கணக்கில் பணம் கட்டி ஏமாறுவதை தவிர்க்கவும்.

3

Leave A Reply

Your email address will not be published.