திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரியில் நடைபெற்ற “கதார்சிஸ் 2019” 

0
1

திருச்சியில் ‌தேசிய அளவிலான கலை நிகழ்வு “கதார்சிஸ் 2019”    வெள்ளிக்கிழமை அன்று பிஷப் ஹீபர் கல்லுாரியில் முதுகலை சமூகப்பணி துறையினரால் நடைபெற்றது.

இவ்விழாவில் 19க்கும்மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 400-கும் மேற்பட்ட மாணவர்கள்  கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற சமூக பணித் துறை மாணவர்களுக்கு 17 போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் துவக்க விழா வியாழக்கிழமை அன்று துவங்கியது. தலைமை உறையை ஜெ. மனாளன், கல்லூரி நூலகர் மற்றும் பிஷப் ஹீபர் கல்லுாரி டீன், வெளியுறவுத் தொடர்புகள் வழங்கினார். சிறப்பு விருந்தினராக அருட்சகோதரி ஜோஸ்பின் சின்ன ராணி, நிறுவனர், சாக்சீடு தொண்டு நிறுவனம் சிறப்புரையாற்றினார்.

மேலும் இவ்விழாவில் முனைவர் ரெல்டன்  மற்றும் முனைவர் உமேஷ் சாமுவேல் ஜெபசீலன் இணைப்பேராசிரியக ள் கலந்து கொண்டு வரவேற்புரை மற்றும் வாழ்த்துரை வழங்கினர். சனிக்கிழமை அன்று நிறைவு விழா நடைபெற்றது.அதில் சிறப்பு விருந்தினராக அருட்  முனைவர். சாமுவேல் டி. ஸ்டீபன், தலைவர் இந்தியன் காஷ்பெல் லீக், சேலம் ஏதாவது நாய் விழாவினை சிறப்பித்தார்.

2

மேலும் இவ்விழாவில் முனைவர்.Y.E. ஸ்ரீதர்,கோயம்பத்தூர் Talent Management Head, CTS,நிறைவு உரை வழங்கினார்.  முன்பாக கல்லூரி முதல்வர்  முனைவர்.பால் தயாபரன் பங்கேற்று தலைமை உரை வழங்கினார்.  முனைவர். A. ராஜேந்திரன், வரலாறு துரை இணை பேராசிரியர் மற்றும் தலைவர்  வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவின் நிறைவில் கூட்டு மதிப்பெண் அடிப்படையில் முதல் பரிசு மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி க்கு ரூபாய் 10000/-ம் , இரண்டாம் பரிசாக பாரதிதாசன் பல்கலைகழகத்திற்கு ரூபாய் 5000/-ம், மூன்றாம் பரிசு டான் பாஸ்கோ, தர்மபுரிக்கு ரூபாய் 3000/- ம் வழங்கப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.