திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பில் ஏசி பயணியர் நிழற்குடை திறப்பு !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பில் ஏசி பயணியர் நிழற்குடை திறப்பு !
திருச்சி மெயின்கார்டுகேட் அருகே திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சாலையில், ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை மாநில அமைச்சர்கள் சனிக்கிழமை திறந்து வைத்தனர்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி சார்பில், கல்லூரிச் சாலை பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ. 7 லட்சத்தில் குளிரூட்டப்பட்ட பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு வந்தது.
இப்பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் சனிக்கிழமை 28.09.2019 நடைபெற்ற விழாவில், மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்வில் திருச்சி மாநகரக் காவல்துணை ஆணையர்கள் ஆ.மயில்வாகனன், என்.எஸ்.நிஷா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அதிபர் லியோனார்டு பெர்னாண்டோ, செயலர் எஸ்.பீட்டர், முதல்வர் எம். ஆரோக்கியசாமி சேவியர், பொருளாளர் கு.ராயப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.