திருச்சி மாநகர காவல்துறை அணிக்கு 4 பதக்கங்கள்

0
full
ukr

சென்னையில் நடைபெற்ற 63-ஆவது மாநில காவல் பணித் திறனாய்வு போட்டியில் திருச்சி மாநகரக் காவல்துறை அணி 4 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த அணியில் பங்கேற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி, பெண் தலைமைக் காவலர் குர்ஷித் பேகம் ஆகிய இருவரும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். 

இதுபோல போதைபொருள் கண்டுபிடிப்புப் பிரிவில் தலைமைக் காவலர் எட்வின் அமல்ராஜ் பயிற்சியளித்த துப்பறியும் நாய் டைகர் வெள்ளிப் பதக்கம் பெற்றது. சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் கணினிப் பிரிவில் வெண்கலப் பதக்கமும், தலைமைக்  காவலர் பாண்டியன் புகைப்படப்பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றனர். 
இவர்களை திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அ.அமல்ராஜ் பாராட்டினார்.
 

 

half 1

Leave A Reply

Your email address will not be published.