இந்தியாவிலேயே மிக பழமையான லிப்ட் நம்ம திருச்சியில் இருக்கு !

இந்தியாவிலேயே மிக பழமையான லிப்ட் நம்ம திருச்சியில் இருக்கு !
நேற்றைய தினம் திருச்சி New Indian express செய்தியாளரும் எனது நண்பருமான josh Joseph நேற்று காலை என்னை தொலைபேசியில் அழைத்து இந்த லிப்ட் கதை தெரியுமா என்று கேட்டார் .. நான் சொன்னேன் ஜெர்மனியில் சீமென்ஸ் மற்றும் அமெரிக்க ஆய்டிஸ் இரு கம்பெனிகளும் 1890 வாக்கில் லிப்ட் தயாரித்தார்கள் , மற்ற படி எனக்கு வேறு விவரங்கள் தெரியாது என்று சொன்னேன் ..


மறுபடி அவரே நேரில் சென்று பல விவரங்களை சேகரித்து என்னிடம் அதை பற்றி சொன்னார் ..திருச்சியில் நிறைய பழமையை தேடி அலையும் அற்புதமான ஒரு நிருபர் இவர் .. தமிழ் சுமாராக பேசினாலும் .. நிறைய உழைக்கிறவர் !!! கேரளாவை சேர்ந்தவர் !!! பல பழமையான விசயங்களை பற்றி என்னிடம் கேட்டு அறிவார் .. அதற்க்கு மேல் அவர் செய்யும் விசயம் மேஜிக் ,, மிரட்டும் படிப்பு !!!hats of him !!! i appreciate his reporting
ஆம் திருச்சிக்கு எவ்வளவு பெருமை .. இந்தியாவில் இன்று ஒரு மாடி இருக்கும் அபார்ட்மென்ட் கூட லிப்ட் இருக்கிறது , ஆனால் இந்தியாவிலேயே மிக பழமையான லிப்ட் நமது ஊரில் இருக்கு !! அதுவும் கிட்டத்தட்ட உலகில் லிப்ட் கண்டுபிடித்த காலத்திலேயே சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்னமே ..
இதை 2016 க்கு பிறகு பயன்படுத்த வில்லை .. காரணம் உதிரி பாகங்கங்கள் கிடைக்க வில்லை ..
விஜயராகவன் கிருஷ்ணன்
