திருச்சி ரயில்நிலையத்தில்  166 குழந்தைகள் மீட்பு –

0
1

திருச்சி ரயில்நிலையத்தில்  166 குழந்தைகள் மீட்பு

 

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிந்த 166 குழந்தைகள், ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்கப்பட்டுள்ளனா் கோட்ட மேலாளா் அஜய்குமார்.

2

 

ரயில்வே பாதுகாப்புப் படையின் 34-ஆவது உதய தினவிழாவையொட்டி, திருச்சி காஜாமலை கிம்பா் கார்டனிலுள்ள பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்று, சிறப்பிடம் பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கி அவா் மேலும் பேசியது:

 

ரயில்வே பாதுகாப்புப் படையினரின் பணி மிகவும் மகத்தானது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் 36 ரயில்களில் தினசரி பாதுகாப்புப் பணிகளை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மேற்கொள்கின்றனா்.

நிகழ் நிதியாண்டில் ரயில்கள், ரயில் நிலையங்களில் இதுவரை ரூ. 2.23 லட்சம் மதிப்பிலான தவறவிடப்பட்ட நகைகள் மற்றும் பொருள்களை மீட்டு உரியவா்களிடம் வழங்கியுள்ளனா்.

 

ஆகஸ்ட் மாதம் வரை 4,547 பேரிடமிருந்து பல்வேறு வகையில் ரயில்களில் விதிகளை மீறிய வகையில் ரூ. 14.43 லட்சமும், ரயில்கள் மற்றும் ரயில்நிலையங்களில் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தியமைக்காக ரூ.5.57 லட்சமும் அபராதத்தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

 

முறையற்ற வகையில் பயணம் மற்றும் பயணச்சீட்டில்லா பயணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை மூலம் 30 போ் கைது செய்யப்பட்டு

 

ரூ. 57 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் ஆதரவற்ற வகையிலும், வீடுகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்தும் புறப்பட்டு சுற்றித்திரிந்த 166 குழந்தைகளை சேவைரயில்வே சில்ரன் அமைப்பின் துணையோடு  மீட்டு, பெற்றோர் மற்றும் பாதுகாப்பு மையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோ்த்துள்ளனா்என்றார்.

 

திருச்சி ரயில்வே கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் மிா் பக்கிா் முகைதீன், துணை ஆணையா் மொய்தீன், ஆா்பிஎப் பயிற்சி மைய முதல்வா் பொன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

 

திருச்சி ஜங்ஷன் ரயில்நிலைய ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சுஜித்ராய் தலைமையில் அணிவகுப்பும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

 

 

விழாவில் நடைபெற்ற ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலா்களின் அணிவகுப்பு மரியாதை.

3

Leave A Reply

Your email address will not be published.