திருச்சி மக்களை காக்கப்போகும் காவிரி காவலன்

0
full

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் காவிரி காவலன் என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் :திருச்சி மாவட்ட மக்களுக்கு இன்று மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாகவும், படங்கள் மூலமாகவும், வீடியோக்கள் மூலமாகவும், சொந்த குறைகளையோ அல்லது பொதுவான குறைகளையோ காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கக்கூடிய வகையில் இந்த செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

poster
ukr

இதில் சட்டவிரோதமான நடவடிக்கைகள் பற்றி ரகசியமான தகவல்களும் சொல்லலாம், அவர்களுடைய பெயர், முகவரி, கைபேசி எண்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

முதல் முறையாக இந்த செயலியை திருச்சி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். விரைவில் திருச்சி சரகத்திற்குட்பட்ட அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் அறிமுகப்படுத்தவுள்ளோம் என்றார். இந்த செயலியில் வருகின்ற மாதங்களில் இன்னும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்வுள்ளதாகவும் தெரிவித்தார். காவல்துறையில் ஏற்கனவே காவலன் என்ற செயலி பெண்களின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தபட்டு வருகின்ற போதிலும் இந்த காவிரி காவலன் செயலி திருச்சி மாவட்ட மக்களுக்காக தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அவருடன் இணைந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் செயலியை அறிமுகப்படுத்தினர்.

பின்னர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சாலை விபத்துகளில் துரிதமாக செயல்பட்டு காயமடைந்தவர்களை காப்பாற்றிய கிராம இளைஞர்களை பாராட்டி கவுரவித்தார்

half 1

Leave A Reply

Your email address will not be published.