திருச்சியில் 25 ஆயிரம் லஞ்சம் கேட்டு சிக்கிக்கொண்ட டிஎஸ்பி க்கு 2 ஆண்டு சிறை

0
Business trichy

 

திருச்சியில் 25 ஆயிரம் லஞ்சம் கேட்டு சிக்கிக்கொண்ட டிஎஸ்பி க்கு 2 ஆண்டு சிறை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள கீழவாளாடியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் ஒரு கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த டிரஸ்ட்க்கு வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற போலீஸ் தடையில்லா சான்று  வாங்க வேண்டியிருந்தது. இதற்காக கடந்த 2012 ஆம் ஆண்டு ராஜமாணிக்கம் லால்குடி டிஎஸ்பி செல்வமணியிடம் சான்றிதழ் கேட்டு அணுகினார்.

loan point
web designer

அப்போது டிஎஸ்பி செல்வமணி ரூ.25,000 லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத ராஜமாணிக்கம் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸில் டி.எஸ்,பி செல்வமணியுடன் பேசிய ஆடியோவுடன் புகார் அளித்தார். அதனடிப்படையில் டிஎஸ்பி சிலம்பரசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், டிஎஸ்பி செல்வமணியை பிடிக்க வலைவிரித்தனர். அதன்மூலம் கடந்த 19.7.2012 அன்று டிஎஸ்பி செல்வமணி மற்றும் எஸ்ஐ சந்திரசேகரனிடம் ரூ.25,000 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொடுத்த ரசாயன தடவிய பணத்தினை ராஜமாணிக்கம் கொடுத்தார். அப்போது அருகில் மாற்று வேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் டிஎஸ்பி செல்வமணி லஞ்சம் வாங்கும்போது கையும்களவுமாக பிடித்தனர். இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

nammalvar

இதில் இன்று 27/09/2019 நீதிபதி ரவிசந்திரன் குற்றம் சாட்டப்பட்ட டிஎஸ்பி செல்வமணிக்கு 2 ஆண்டு சிறையும், எஸ்ஐ சந்திரசேகரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

லஞ்சம் பெற்று காவல் உயர் அதிகாரி சிக்கிக்கொண்ட சம்பவம் திருச்சி காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.