திருச்சியில் அகில பாரத இந்து சபா பிரமுகர் கடத்தல்

0
1

             கடத்தப்பட்ட இளையராஜா | கைதான செந்தில்

திருச்சியில் சமீபத்தில் தஞ்சையை சேர்ந்தவர் ரகுராமன். இவர் பெரிய தொழிலதிபர் நண்பர்களுடன் காரில் கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டு ரகுராமன் ஊர் திரும்பினார். திருச்சி மன்னார்புரம் அருகே வந்தபோது மர்ம நபர்கள் திடீரென காரை மறித்தனர். ரகுராமன், அவருடைய நண்பர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்த மர்ம கும்பல் தப்பியோடியது. இதுபற்றி புகார் கே.கே.நகர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணையில் பணம் பறித்த கும்பல் காஜா நகர் குடிசை பகுதியை சேர்ந்த கும்பல் என்றும், அங்கிருந்த அய்யப்பன், முத்து, சதீஷ்குமார், மணி ஜாக்சன் மணி ஆகியோர் என கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர்.

4

அதன்பின் திருச்சி மார்க்கெட் -பால்பண்ணை சாலையில் கடந்த ஆகஸ்ட் 29 தேதி
திருச்சி வரகனேரி முதல்தெருவை சேர்ந்த சோமசுந்தரம்(வயது 55). இவர், நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சூதாட்ட கிளப் நடத்தி வந்தார். நிதி நிறுவன தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் சோமசுந்தரம் வீட்டில் இருந்து காரில் சமயபுரத்துக்கு புறப்பட்டார். திருச்சி தாராநல்லூரை சேர்ந்த டிரைவர் பாபு(35) காரை ஓட்டி சென்றார். அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே கார் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு கார் சோமசுந்தரத்தின் காரை வழிமறித்து நின்றது. அந்த காரில் வந்த 4 பேரில், 3 பேர் மட்டும் காரில் இருந்து இறங்கி சோமசுந்தரத்தையும், டிரைவர் பாபுவையும் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டினர். பின்னர் 3 பேரும் சோமசுந்தரம் வந்த காருக்குள் ஏறிக் கொண்டனர். சோமசுந்தரம் மற்றும் பாபுவின் கண்களை கட்டிவிட்டு காரை அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு ஓட்டி சென்றனர். நள்ளிரவு 1.30 மணி அளவில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அண்ணா கோளரங்கம் அருகே சென்றதும் காரை நிறுத்தினர். அதன்பிறகு காரில் இருந்து இறங்கிய 3 பேரும் பின்னால் வந்த தங்களுடைய காரில் ஏறி தப்பி சென்றனர். இதில் கிளப் அதிபர் சோமசுந்தரம் சந்தேகத்தின் அடிப்படையில் இறந்துக் கிடந்தார்.

2

அதனைத் தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் அருகே நேற்று இரவு நடந்து சென்றிருந்த நபரை ஒரு மர்ம கும்பல் காரில் கடத்தி சென்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரை சேர்ந்தவர் இளையராஜா (30) அகில பாரத இந்து மகாசபா மாநில செயலாளர் இருந்து வருகிறார். இவர் நேற்று 27/09/2019  இரவு 8.30 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நடந்து சென்ற போது அவர் பின்னே வந்த காரில் இருந்து சந்தேகப்படியான நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக வண்டிக்குள் இழுத்துப்போட்டு சென்றுள்ளனர். இதனை கண்டவுடன் அப்பகுதியில் உள்ளவர்கள் காந்திமார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதனடிப்படையில் போலீசார் அந்த காரை ரகசியமாக பின்தொடர்ந்து திருச்சி காவேரி பாலம் அருகே வளைத்துப்பிடித்தது.

மேலும் பிடிக்கப்பட்ட நபர்களான பெரம்பலூர் செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை காந்திமார்க்கெட் போலீசார் விசாரணை செய்ததில், அந்நபர்கள் இளையராஜா அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வாங்கிவிட்டு வேலையும் வாங்கித்தரவில்லை, கொடுத்த பணத்தையும் திரும்ப தர மறுக்கிறார். கேட்டால் வெளியே இருப்பதாக பொய் கூறுகிறார். அதனால் அவரை மிரட்டுவதற்காக தான் இப்படி செய்ததாக கூறியுள்ளனர்.

மேலும் திருச்சி மாவட்டங்களில் இதுப்போன்ற தொடர் கடத்தல் சம்பவங்கள் நிகழ்வதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்