பொம்மை வீடு காவல் நிலையங்கள் உருவாக்குதல் போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு

0
D1

 

திருச்சிராப்பள்ளி சரக காவல்துறையின் சார்பாக நடத்தப்பட்ட பொம்மை வீடு காவல் நிலையங்கள் என்ற போட்டியானது சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து காவல்துறை தொடர்புடைய பணிகளில் அவர்களுக்கு ஒரு ஈடுபாட்டினை வரவழைப்பதற்காக முன்முயற்சி எடுத்து நடத்தப்பட்ட ஒரு நிகழ்வாகும். போட்டியில் பங்கேற்ற பொம்மை வீடு காவல்நிலைய கட்டிடங்களில், போட்டியாளர்கள் தங்களது பொம்மை வீடுகளை எடுத்துச் சென்றவை தவிர மற்ற பொம்மை வீடு காவல் நிலையங்கள் திருச்சி சரகத்தில் அமைந்து உள்ள அனைத்து காவல் நிலையங்களில் வைக்கப்படும்.

இந்த பொம்மை வீடு காவல் நிலைய மாதிரி கட்டிட வடிவமைப்பு புதுக்கோட்டை ரோடு, சுப்ரமணியபுரம், திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் (திருச்சி மாவட்ட காவல் அலுவலகம் அருகில்) 21.09.19 சனிக்கிழமை மற்றும் 22.09.19 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காகவும் ஓட்டளிப்புக்காகவும் வைக்கப்பட்டது. போட்டி ஜூனியர் மற்றும் சினியர் ஆகிய இரண்டு பிரிவாக வைக்கப்பட்டு போட்டியில் வெற்றியாளர்கள் பொதுமக்கள் வாக்களிப்பின் மூலமாக தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். இதில் காவல்துறை துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

D2

ஜூனியர் பிரிவில் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.5000 மும், இரண்டாம் பரிசாக ரூ.4000 மும், மூன்றாம் பரிசாக ரூ.3000 மும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சீனியர் பிரிவில் இரண்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.5000 மும் இரண்டாம் பரிசாக ரூ.2000 மும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பரிசுகள் விபரம்

N2

ஜூனியர் பிரிவு

முதல் பரிசு -ஆர்.பரசுராம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெண்கலம் கிராமம், பெரம்பலூர் மாவட்டம்.

இரண்டாம் பரிசு – எம். ஹரிணி, எம்.ஹேமா, எம்.யஸ்வந்த், ஜெகன் மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,திருச்சி

மூன்றாம் பரிசு – டி.மோனிகா, லிட்டில் ஸ்காலர் மேல்நிலைப்பள்ளி,தஞ்சாவூர்
சீனியர் பிரிவு

முதல் பரிசு – எப்.ஜியாவுதீன், எப்.அஜிஜூதீன் புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,திருச்சி

இரண்டாம் பரிசு – எம்.விகாஸ், எ.இப்ராம் அப்பாஸ், யு.அருண்குமார் மௌண்ட் சியோன் இன்ஜினியரிங் கல்லூரி புதுக்கோட்டை.

N3

Leave A Reply

Your email address will not be published.