திருச்சி அருகே மயான பாதையின்றி : இறந்தவர் உடலை சுமந்து செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதி.

0
Full Page

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள தேவராயநேரியில் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.இந்த காலனியை சேர்ந்த யாராவது இறக்க நேரிட்டால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக அரசு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருந்தது. ஆனால், அந்த இடுகாடு போதிய பராமரிப்பு இல்லாததால் முட்புதர்களால் சூழப்பட்டுள்ளது. மேலும் தனிநபர் ஆக்கிரமிப்பும் உள்ளது.

மழைக்காலங்களில் இடுகாடு அருகே உள்ள வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது இறந்தவரை அடக்கம் செய்ய குழிதோண்டும்போது தண்ணீர் ஊற் றெடுக்கிறது. இதனால், இறந்தவர் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Half page

சாலை மறியல் முயற்சி

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த காட்பாடியின் மனைவி அசோகாயி(வயது 55) என்பவர் நேற்று இறந்தார். அவரது பிணத்தை இடு காட்டுக்கு எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இடுகாட்டுக்கு செல்லும் சாலையானது, சேறும்-சகதியுமாக இருந்தது. அங்குள்ள வாய்க்காலில் மழைநீரும் பெருக்கெடுத்து ஓடியது. ஆகவே, பிணத்தை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர்கள் இடுகாட்டுக்கு சாலை வசதி கேட்டு திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தேவராயநேரியில் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உங்களது குறைகளை அதிகாரிகளிடம் தெரிவியுங்கள், சாலை மறியல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினர். அதன்பேரில், அவர்கள் அசோகாயியின் உடலை மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.