திருச்சி சமயபுரம் கோயில்:செப்.29-இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்.

0
D1

திருச்சி சமயபுரம் அருள் மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா செப்டம்பர் 29 தொடங்கி அக்டோபர் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான கே.பி. அசோக்குமார் கூறியது:

N2

இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி அமாவாசை மறுதினம் பிரதமை திதி முதல் நவமிதிதி வரை தேவி பாகவதம், அக்னிபுராணம், தேவி மஹாத்மியம் ஆகிய புராணக் கூற்றுகளின் படி, மகிசாசுரனை அழிக்க அம்மன் 9 நாள்கள் கடும் தவம் புரிந்து 10-ஆவது நாள் விஜயசதமியன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெருவிழாவாகக் கொண்டாடுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு திருவிழா செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்குகிறது. தினமும் மாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். மாலை 6 மணிக்கு நவராத்திரி மண்டபத்தில் காட்சியளிக்கும் அம்மனுக்கு இரவு 8 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடைபெறும்,

D2

அக்டோபர் 7-ஆம் தேதி சரசுவதி பூஜையும், 8-ஆம் தேதி விஜயதசமியன்று இரவு 7.30 மணிக்கு அம்பாள் புறப்பாடாகி வன்னிமரம் அடைந்து அம்புபோடும் நிகழ்வு நடைபெறும். விழாவில் அம்மனை தரிசிக்கும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.