திருச்சி அரசுப்பள்ளியில் தூய்மை இந்தியா திட்டம்

0
Business trichy

தூய்மை இந்தியா திட்டம்

அருவாக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி 150 பிறந்த ஆண்டு விழாவை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டப்படி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்ற அமைப்பில் பல தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது.

இம்முன்னேற்றமானது நிலையாகவும் தூய்மையாகவும் தொடர்ச்சியாகவும் அமையவேண்டும் என்பதற்காகத் தான் ஐந்தாண்டு திட்டங்கள் பலவற்றை அரசுகள் தீட்டுகின்றது. செயல்படுத்துகின்றது. அவற்றில் ஒன்றுதான் “தூய்மை இந்தியா திட்டம்”.

Image
Rashinee album

மக்களில் பலர் வசதியாக இருந்தாலும் தூய்மையாக இல்லாததால் தொற்று நோய்களுக்கு ஆட்படுகின்றனர். அதனால் பொது இடங்களில் குப்பைகளை கண்ட இடங்களில் போடுதல், கண்ட இடங்களில் எச்சில் துப்புதல், கழிப்பறை செல்லுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதால் நம்மைச் சுற்றியுள்ள பகுதி அசுத்தமாக அமைந்து அதனால் நோய்கிருமிகள் உருவாகி மக்களைப் பாதிக்கின்றன.

பாரதப் பிரதமர் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் உண்மையான திட்டமான “தூய்மை இந்தியா” என்பதை முதன்மை நோக்கமாக கொண்டு “தூய்மை பாரதம்” என்ற பொது இடங்களை தூய்மை செய்தல் என்ற முறையில் செயல் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அரசு அலுவலங்களிலும், தன்னார்வ தொண்டு நிறுனங்களிலும், வீடுகளிலும், காடுகளிலும், தெருக்களிலும், பொது இடங்களிலும் அனைத்து மக்களும் தானே இத்திட்டத்தை செயல்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

அதன் விரிவாக்கமாக கிராமப்புற வீடுகளில் கழிவறை, கிராமத்திற்கான பொதுகழிவறை, நகர்ப்புறங்களில் கழிப்பறைகள், பள்ளி கல்லூரிகளில் கழிப்பறைகள், பெண்களுக்கான தூய்மை பிராச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.
அதனடிப்படையில் பள்ளியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.பள்ளியில் உருவாகும் திட திரவக் கழிவுகளை சரியான முறையில் மேலாண்மை செய்து பொது சுகாதாரத்தை பேணவேண்டும். திடக்கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பையினை மறு சுழற்சி செய்யக்கூடிய வகையில் பிரித்து கையாள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமை வகித்தார் .அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனரும் யோகாசிரியருமான விஜயகுமார் முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் வரவேற்க சூசைராஜ் நன்றி கூறினார்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.