திருச்சியில் ரோட்டரி கிளப் வழங்கும் “நாயகன் – நல்லாசிரியர் விருது”

0

food

திருச்சி ரோட்டரி கிளப் (GEMS INNOVATORS) மூலம் செப் -24 தேதி “நாயகன் – நல்லாசிரியர் விருது” வழங்கும் விழா ஹோட்டல் லீ டெம்ப் போர்ட்டில் (Hotel Le Temp Fort) நடைபெற்றது. இவ்விழாவில் ரோட்டரி சங்கத்தலைவர் வள்ளியப்பன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்வி சேவகர்களை பாராட்டும் விதமாக இவ்விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் புஷ்பலதா, பவர் இன்ஸ்டிடியூட் இயக்குநர் சூர்யகுமார், ஆசிரியர் கன்னியம்மாள், ஆசிரியர் வாசுகி திலகா ஆகியோரது கல்வி சேவையை பாராட்டும் விதமாக ROTARY CLUB OF TRICHY GEMS INNOVATORS சார்பாக “நாயகன் – நல்லாசிரியர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் மகளிர் மன்ற தலைவர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.