திருச்சி வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு.

0
1 full

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நெய்குப்பை கிராமம் காமராஜர் காலனியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராஜேஸ்குமார் (30). மரவேலை செய்யும் பட்டறையில் வேலை செய்து வந்தார்.

இவருக்கும், புனல்வாசல் கிராமத்தை சேர்ந்த சுமித்ரா என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த்து. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் சுமித்ரா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்குமார் தினமும் மதுகுடித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு அகலங்கநல்லூரில் உள்ள சுமித்ராவின் அக்கா வீட்டிற்கு சென்று மனைவியை சேர்த்து வைக்கும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜேஸ்குமார் அகலங்கநல்லூரில் கிராமத்திற்கு அருகே பங்குனி வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.நேற்று காலை வயலுக்கு சென்றவர்கள் வாய்க்காலில் ராஜேஸ்குமார் இறந்த உடலை கண்டு அதிர்ச்சி அடைந்து லால்குடி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் பிரேதத்தை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

2 full

இது குறித்து ராஜேஸ்குமார் மனைவி சுமித்ரா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராஜேஸ்குமார் குடித்துவிட்டு மதுபோதையில் தடுமாறி வாய்க்காலில் விழுந்து இறந்து விட்டாரா அல்லது அடித்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டாரா அல்லது மனைவியை பிரிந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.