திருச்சியில் பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி தீக்குளிப்பு

0
gif 1

திருச்சியில் சமீப காலமாக கஞ்சா கும்பலின் ஆதிக்கம் தலை விரித்தாடுகிறது. அதனடிப்படையில் கடந்த செப்-6 தேதி காஜாப்பேட்டை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்து செல்போனை திருட முயன்றபோது அப்பகுதி மக்கள் அடித்து கண்டீத்து அனுப்பினர். அடிவாங்கிய அக்கும்பல் மறுநாள் அவ்வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ளவர்களை அடித்து பலி வாங்கியுள்ளது. அதில் படுகாயமடைந்த காமராஜ் (45) என்பவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதன் மூலம் காஜாப்பேட்டை பகுதி மக்கள் மாவட்ட காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் காவல் ஆணையர் அமல்ராஜ் திருச்சி மாநகருக்குள் இருக்கும் கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள கூறியும், கைது செய்ய கூறியும் உத்தரவிட்டார். அதனடிப்படையில் திருச்சி மாநகரில் கஞ்சா புழக்கம் அதிகம் இருக்கும் பகுதிகளில் போலீசார் ரகசிய ஆய்வு செய்து, கஞ்சா விற்கும் நபர்களை ரவுண்டப் செய்தனர்.

gif 3
gif 4

அந்த வகையில் திருச்சி தாராநல்லூர் தூரஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் படையப்பா வயது (30) இவர் சமீபகாலமாக திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து அதனடிப்படையில் காந்தி மார்க்கெட் போலீசார் 3 முறை அந்நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் படையப்பா மீது தொடர்ந்து கஞ்சா விற்பனை குறித்த புகார் வந்து கொண்டிருப்பதால் காந்தி மார்க்கெட் போலீசார் நேற்று மதியம் 2 மணி அளவில் படையப்பா வீட்டிற்குச் சென்றுள்ளனர் அங்கு படையப்பாவை போலீசார் பிடிப்பதற்கு வருவதை அறிந்த அவரது தாயார் தமிழ்செல்வி (வயது 50), என்பவர் வீட்டிற்குள் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து மேலே ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

மேலும் தீ வைத்துக் கொண்ட படையப்பாவின் தாயார் தமிழ் செல்வி மீது ஏற்கனவே காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை குறித்த வழக்குகள் இருப்பதாக காந்தி மார்க்கெட் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்மூலம் படையப்பாவை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து சுமார் 3 கிலோ மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தீக்காயமடைந்த தமிழ்ச்செல்வி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

பட்டப்பகலில் திருச்சி மாநகரில் போலீசார் ஒரு நபரை கைது செய்ய சென்றபோது பெண்ணொருவர் தீக்குளித்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

gif 2

Leave A Reply

Your email address will not be published.