கேபிள் பணம் ரூ.154 தான். ஆபரேட்டர்களுக்கு திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

0
1 full

கேபிள் பணம் ரூ.154 தான். ஆபரேட்டர்களுக்கு திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

அரசு செட்டாப் பாக்ஸ் முடக்கி வைத்திருந்தாலோ, 154 ரூபாய்க்கு அதிகமாக கேபிள் கட்டணம் வசூல் செய்தாலோ கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி கலெக்டர் சிவராசு எச்சரிக்கை செய்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் அரசு செட்டாப் பாக்ஸ் மூலம் 200 சேனல்கள் 154 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற கேபிள் ஆபரேட்டர்கள் முடக்கி வைத்திருக்கும் அரசு செட்டாப் பாக்ஸ்களை உடனடியாக இயக்கி வைக்க வேண்டும். இதற்கான கால கெடு அக்டோபர் 10ம் தேதியாகும். மேலும் அரசு செட்டாப் பாக்ஸ்கள் பொருத்த எந்த கட்டணமும் பெறக்கூடாது. அரசு நிர்ணயித்துள்ள கேபிள் கட்டணம் 200 சேனல்கள் 130 ரூபாய் கட்டணம் + GST 18% என ரூ 154 மட்டுமே. இதனை மீறி கட்டணம் வசூலித்தால் சம்மந்தப்பட்ட ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிவராசு எச்சரித்துள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.