“பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து அக்.,29-இல் முழு கடையடைப்பு போராட்டம்” –  பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் அறிவிப்பு!

0
D1

பேரழிவுக்கு எதிரான பேரியக்கத் தலைவர் லெனின் திருச்சி பத்திரிகையாளர் சந்திப்பில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மீத்தேன், சாகர்மாலா, அனல்மின் நிலையங்கள், அணுக் கழிவுகளை கூடங்குளத்தில் கொட்டுதல், எட்டு வழிச் சாலை, விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதித்தல், மின் உயர் கோபுரம் அமைத்தல், அந்நிய நிறுவனங்களுக்கு சில்லறை வர்த்தகத்தில் அனுமதி வழங்குதல், இந்தித் திணிப்பு, வட இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு போன்றவை தமிழ்நாடு மக்கள் மீது திணிக்கப்படும் பேரழிவு பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

N2

இது இன அழிப்பு நடவடிக்கை ஆகும். மத்திய அரசு இதைத் தொடர்ந்து செய்து வருகிறது. மாநில அரசு இதற்கு உறுதுணையாக இருக்கிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில், இந்த பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதில் அரசு அலுவலர்கள் குறுக்கீடு செய்யக் கூடாது.

அன்று மாலை உறுதி ஏற்புக் கூட்டங்கள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக பொது வேலைநிறுத்தம் நடைபெறும். திமுக கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்” என்றார்.

N3

Leave A Reply

Your email address will not be published.