திருச்சி ஸ்ரீரங்கம் கோயில்களில் நவராத்திரி உற்ஸவம் செப்.29-இல் தொடக்கம்.

0
full

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருவானைக்கா சம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோயிலில் செப்.29 -ஆம் தேதி நவராத்திரி உற்ஸவம் தொடங்குகிறது.
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் நவராத்திரி உற்ஸவத்தின் முதல் நாளான செப். 29 -ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளிய பின்னர், கருவறையிலிருந்து மாலை 6.30 மணிக்குப் புறப்படும் ஸ்ரீரங்க நாச்சியார் இரவு 7 மணிக்கு கொலு மண்டபத்தை சென்றடைகிறார்.
இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் ஸ்ரீரங்க நாச்சியார், இரவு 9.45 மணிக்குப் புறப்பட்டு 10 மணிக்கு கருவறை சென்றடைகிறார். இதுபோல ஒவ்வொரு நாளும் புறப்பாடு நடைபெறும்.

half 2

உற்ஸவத்தின் 7 -ஆம் நாளான அக்டோபர் 5 -ஆம் தேதி ஸ்ரீரங்கநாச்சியார் திருவடிசேவையும், 9- ஆம் திருநாளான அக்டோபர் 7- ஆம் தேதி (சரசுவதி பூஜையன்று) படிப்பு கண்டருளுதலும் நடைபெறஉள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

திருவானைக்கா கோயிலில் செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கும் நவராத்திரி கொலு உற்ஸவம் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறும். நவராத்திரி மண்டபத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்கராத்தில் அகிலாண்டேசுவரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நவராத்திரி கொலுமண்டபத்தில் நாள்தோறும் நடைபெறும்.

half 1

Leave A Reply

Your email address will not be published.