திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி சங்கத்தினர் எம்.பி சிவா-விடம் மனு

திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் சங்க சார்பாக நேற்று எம்.பி சிவாவிடம் மனு அளித்தனர். அம்மனுவில் திருச்சி ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் ரயிலில் ஏறுவதற்கான கைவண்டி மற்றும் வாகனத்தை நிறுத்தி விட்டு நடைமேடைக்கு செல்வதற்கான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும்,
ரயில் நிலையத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் நான்கு சக்கர பேட்டரி வாகனம் முதலியவற்றிற்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது எனவும் ரயில்வே நிர்வாக அதிகாரியிடம் நாங்கள் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கைகளும் இல்லை. மேலும் தென்னக ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென இயங்கி கொண்டிருந்த தனிப்பட்ட கூடுதல் பெட்டிகளை திடீரென ரயில்வே நிர்வாகம் அகற்றியது இதனால் மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பயணிக்க பெரும் அவதிப்படுவதாக தெரிவித்து திருச்சி உடல் ஊனமுற்றோர் சங்கம் சார்பாக செயலாளர் மாரிக்கண்ணன், செயற்குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் மனு அளித்தனர்.
